அடுத்த வருடமே அரசியலில் இருந்து விலகுவாரா? மோடிக்கு சவால் விடும் அரவிந்த் கெஜ்ரிவால்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகும் என்பதால் 2025இல் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Arvind Kejriwal's dig at PM: 'Modi turning 75 next year, will he retire?' sgb

உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

"இந்திய பிளாக் கட்சிகளிடம் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று பாஜக தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. காவி கட்சியினரிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று நான் கேட்கிறேன்?" என கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகும் என்பதால் அவர் 2025 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று கேஜ்ரிவால் கேட்டார்.

அனுமன் கோயிலுக்குச் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் இன்று பிரமாண்ட ரோடு ஷோ!

"பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17ஆம் தேதி 75 வயதாகிறது. கட்சியில் உள்ள தலைவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை அவர்தான் உருவாக்கினார். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டார்கள். இப்போது மோடி ஓய்வு பெறப் போகிறார். செப்டம்பர் 17ஆம் தேதி" என்று அவர் கூறினார்.

"தங்கள் அரசு அமைந்தால் முதலில் யோகி ஆதித்யநாத்தை அப்புறப்படுத்திவிட்டு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்குவார்கள். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு ஓட்டு கேட்கிறார். மோடியின் உத்தரவாதத்தை அமித் ஷா நிறைவேற்றுவாரா?" என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

"அப்போது மோடியின் கியாரண்டியை யார் வழங்குவார்கள்? உங்கள் வாக்குறுதிகளை அமித் ஷா நிறைவேற்றுவாரா?" என்று கேட்டார். பாஜக வாக்காளர்கள் மோடிக்கு வாக்களிக்கப் போவதில்லை, அமித் ஷாவுக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

காங். நிர்வாகி ஜெயக்குமார் கொலையில் புதிய திருப்பம்! திட்டம் போட்டவரை நெருக்கும் போலீஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios