arvind kejriwal involved in hawala corruption says kapil mishra

மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக எதிர்த்தது முக்கியக் காரணம், அவர் ஹவாலா தரகர்களுடனும், ஹவாலா ஊழலிலும் தொடர்பு இருக்கிறது என்று ஆம் ஆத்மிகட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

நீக்கப்பட்ட அமைச்சர்

டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை திறம்பட கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆம்ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா கடந்த வாரம் முன்பு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது அவர் ஊழல் புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அடுக்கடுக்காக புகார்

இதையடுத்து, கெஜ்ரிவால் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் புகார்களை கபில்மிஸ்ரா தெரிவித்து வருகிறார். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் முகேஷ் சர்மா என்பவரிடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ரூ.2 கோடி நிதி பெற்றது இது ஹவாலா பணம். இது போல் பல ஹவாலா தரகர்களிடம் இருந்து ஆம் ஆத்மிகட்சிக்கு பணம் வந்துள்ளது என கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாகவே, மத்திய அரசு கொண்டுவந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்பை முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக எதிர்த்தார் என்று கபில் சர்மா தெரிவித்தார்.

நன்கொடை

இதற்கு பதில் அளித்த டெல்லியைச் சேர்ந்த முகேஷ்சர்மா நேற்று முன்தினம் பேசுகையில், “ ஆம் ஆத்மி கட்சிக்கு கட்சிக்கு கடந்த 2014ம் ஆண்டு நான்தான் ரூ.2 கோடியை ரூ.50 லட்சம் காசோலையாக நன்கொடை அளித்தேன்’’ எனத் தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார்போல், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்சிங்கும்,முகேஷ் சர்மாவிடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி பணம் பெறப்பட்டது. அந்த பணம் சரியான முறையில் வங்கி மூலமே பெறப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

போலி நிறுவனம்

இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா நேற்று கூறுகையில், “ ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.2 கோடி நிதிஅளித்த முகேஷ் சர்மா எந்த நிறுவனங்களையும் நடத்தவில்லை. அவர் போலியான நிறுவனங்கள் பெயரில் அவர் நிதி அளித்துள்ளார். முகேஷ் குமாரின் நிறுவனமே வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிறுவனம் அப்படி இருக்கும்போது எப்படி நிதி அளிக்க முடியும்.

தயாரா?

முதல்வர் கெஜ்ரிவால், வருமான வரித்துறையிடம் தனக்கு வந்த ரூ.2 கோடி நிதி குறித்து கூறத் தயாரா? டெல்லி அரசுக்கு வாட் வரியையும் முகேஷ் சர்மா செலுத்தாமல் நோட்டீஸ் பெற்றவர். அப்படி இருக்கும் போது, எப்படி அவர் ரூ.2 கோடி நிதி அளிக்க முடியும்.

தொடர்பு

ஆம் ஆத்மி கட்சி ஹவாலா தரகர்களிடம் இருந்துதான் நிதி பெற்றுள்ளது அதை நிரூபிக்க முடியும். கெஜ்ரிவாலுக்கு ஹவாலா தரகர்களுடனும், ஹவாலா ஊழலிலும் தொடர்பு உள்ளது. அதனால்தான் என் கேள்விகளுக்கு பதில் அளிக்ககெஜ்ரிவால் மறுக்கிறார்’’ என குற்றம்சாட்டினார்.