வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு..! அடுத்த அதிரடி கிளப்பிய அருண்ஜெட்லி..! 

பின்லேடனை பிடிக்க பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்தது போல இந்தியாவும் நுழைய தயார் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காரசாரமாக பேசி உள்ளார்.

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதே போன்ற நடவடிக்கைக்கு இந்தியாவும் தயாராக உள்ளது என  தெரிவித்து உள்ளார் அருண் ஜென்லி 

மேலும், பாகிஸ்தானின் உள்ளே புகுந்து அமெரிக்கா தாக்கியது போலவே இந்தியாவும் உள்ளே புகுந்து தாக்கும், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அரை நூற்றாண்டிற்கு பின் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக..! 

எந்த தாக்குதலுக்கும் நாங்க தயாராக இருக்கோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியிருக்கிறார். எங்களது பாதுகாப்பு மற்றும் உரிமையை காண்பிக்க மட்டுமே தாக்குதல் நடத்தினோம். மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை உணர வைத்துள்ளது. மேலும்  இந்தியாவின்  வல்லமையை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன. பல்வேறு நாடுகள் தீவிரவாதத்த்தை ஒடுக்கும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் பின்லேடனை தாக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு  நுழைந்து தாக்கியது போல, இந்தியாவும் தாக்க தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளதை பார்த்து அமெரிக்காவே அசந்து போயுள்ளது.