நாட்டை நிர்வாகம் செய்ய வரி வருவாய் முக்கிய தேவையாக உள்ளது என்றும், நாம் நேர்மையாக வரி செலுத்தினால் ஜிஎஸ்டியின் நன்மைகளை நிச்சயமாக அனுபவிக்கலாம் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்ற ஜிஎஸ்டி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், 17 வகையான வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் வளர்ச்சி அடையச் செய்வதே இறையாண்மை என்றும், தற்போது நாட்டின் இறையாண்மை வலுவாக இருப்பதால் இந்தியா வளர்ச்சி அடையும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பன்முகத்தன்மை தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைப்பது சவாலான விஷயம் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.

நாட்டை நிர்வாகம் செய்ய வரி வருவாய் முக்கிய தேவையாக உள்ளது என்றும், நாம் நேர்மையாக வரி செலுத்தினால் ஜிஎஸ்டியின் நன்மைகளை நிச்சயமாக அனுபவிக்கலாம் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.