arun jaitley defamation case against kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு புதிய அவதூறு வழக்கை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முறைகேடு குற்றச்சாட்டு

டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜெட்லி கடந்த 2000ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளைச் செய்தார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், அவரின் கட்சித் தலைவர்கள் பலர் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் எழுதினர்.

அவதூறு வழக்கு

இதையடுத்து, கெஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ராகவ் சந்தா, குமார்விஸ்வாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய் ஆகிய 6 பேர் மீதும் ரூ.10 கோடி கேட்டு மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு தொடர்ந்தார்.

குறுக்கு விசாரணை

இந்த வழக்கின் குறுக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் 15 மற்றும் 17 ந்தேதிகளில் நடந்தது. இதில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜத் மலானி நேரில் ஆஜராகி வாதாடினார். நீதிமன்றத்தில் நிதி அமைச்சர்ஜெட்லி நேரில் ஆஜராகினார்.

கண்டனம்

அப்போது அருண்ஜெட்லியை சர்ச்சைக்குரிய வார்த்தைக்(கிரிமனல்) கூறி ராம்ஜெத் மலானி பேசினார். இதற்கு நீதிமன்றத்திலேயே ஜெட்லியும் அவரின் வழக்கறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

புதிய அவதூறுவழக்கு

அந்த குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய வார்த்தையை நீதிமன்றத்தில் அனைவரின் முன்பு பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நேற்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ப்பட்டது.

ரூ.10 கோடி

அருண்ஜெட்லி சார்பாக அவரின் வழக்கறிஞர் மாணிக் தோக்ரா, இந்த புதிய அவதூறு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர நிருபர்களிடம் கூறுகையில், “ கடந்த வாரம் நடந்த குறுக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கண்டனதுக்குரிய வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அது நீதிமன்ற பதிவேட்டில் பதிவாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தனியாக கெஜ்ரிவாலுக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.