ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மாதத்திற்குள் இப்பகுதியில் ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஞ்ச் சூரன்கோட் பகுதியில் உள்ள தேரா கி காலி (DKG) என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்குப் பின் அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை ஒட்டி அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

கடந்த மாதம், ரஜோரியின் கலாகோட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து, இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் இடமாகவும் இப்பகுதி மாறியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ரஜோரி-பூஞ்ச் பகுதியில் நடந்த இரட்டை தாக்குதல்களில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2003 முதல் 2021 வரை இந்த பகுதி பெரும்பாலும் பயங்கரவாத செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே அடிக்கடி சண்டைகள் நடக்க ஆரம்பித்தன.

கடந்த 2 ஆண்டுகளில் இப்பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 35 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

ஆணுறைக்கு அதிக டிமாண்ட்! ஒரே நாளில் வந்த 67 ஆர்டர்! 2023 இல் களைகட்டிய ஆன்லைன் ஷாப்பிங்!