ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமானநிலையத்தில் கையெறி குண்டுகளுடன் நுழைந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் டெல்லி செல்வதற்காக ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு ஜம்மு காஷ்மீர் 17 வது படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வந்தார். அவரை பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது ஆடைக்குள் இரண்டு கையெறி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கையெறி குண்டுகளை தவறுதலாக எடுத்து வந்தது தெரியவந்தது.