Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதல்! மனைவியின் அந்த இடத்தில் கரன்ட் வைத்து கொலை செய்த ராணுவ வீரர்!

Armed Force jawan kills wife by electrocuting
Armed Force jawan kills wife by electrocuting
Author
First Published Jul 20, 2018, 1:40 PM IST


ராணுவ வீரர் ஒருவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கொடூரமாக தாக்கியதுடன், அவரது பிறப்புறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் ஆயுதப்படையில் பணியாற்றிவரும் சுரேஷ் மிரி என்ற வீரர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பத்தபரா மாவட்டத்தில் உள்ள பலோத்பஜார் பகுதியில் வசித்து வந்தார். சத்தீஷ்கர் ஆயுதப்படையின் 6வது பட்டாலியன் பிரிவில் சமையல் பணியை செய்து வரும் சுரேஷ் மிரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.Armed Force jawan kills wife by electrocuting

மனைவி லட்சுமி வேறு ஒரு ஆணுடன் அடிக்கடி பேசிப் பழகுவதைப் பார்த்த சுரேஷ் மிரி மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவரது மனைவி லட்சுமி பிற ஆண்களுடன பழகுவதை நிறுத்தவில்லை. ஒருநாள் தீவிரவாத தேடுதல் வேட்டைக்குச் சென்ற படையுடன் சென்றுவிட்டு, வீடு திரும்பிய சுரேஷ், தனது மனைவி வேறு ஆணுடன் படுக்கையறையில் இருப்பதைப் பார்த்தார். அந்த ஆண் புறப்பட்டுச் சென்றதும் வீட்டுக்கு வந்த சுரேஷ் மிரி, மனைவி லட்சுமி குளியலறையில் துணிகளை துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது, ஏற்கெனவே படுக்கையறையில் பார்த்த ஆண் குறித்து சுரேஷ் மிரி பேச்சை எடுத்ததும், இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது. Armed Force jawan kills wife by electrocuting

இதையடுத்து, சுரேஷ் மிரி கடுமையாக தாக்கியதால், மனைவி லட்சுமி படுகாயமடைந்த மயங்கி கீழே விழுந்தார். அப்பவும் ஆத்திரம் அடங்காத சுரேஷ், மனைவியின் பிறப்புறுப்பில் வயரை சொருகி மின்சாரத்தை பாய்ச்சினார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து, லட்சுமியின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதாகவும் கூறினார். லட்சுமியின் உடல் அங்கு வந்ததும், மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சுரேஷ் மிரியை பிடித்து விசாரணை நடத்தியதில், மனைவி லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கைது செய்த காவல்துறையினர், சுரேஷ் மிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios