Asianet News TamilAsianet News Tamil

காட்டுக்குள்ள “அரிகொம்பன்” இறங்கிட்டான்.. கண்ணுல பட்ட எல்லாமே காலி.. பயத்தில் உறைந்த கிராம மக்கள்

கேரள மாநிலத்தில் காட்டு யானைகள் அடிக்கடி எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையான ஒன்றாகும்.

Arikomban attacks yet houses peoples fear
Author
First Published Apr 7, 2023, 10:43 AM IST

கேரளா வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

இடுக்கியில் உள்ள சந்தன்பாறை மற்றும் சின்னக்கனல் கிராம பஞ்சாயத்து எல்லையோர வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப்பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக அரிகொம்பன் என்ற காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுவதோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

Arikomban attacks yet houses peoples fear

யானைகளை காட்டுக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாக வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் வனத்துறை சரியான நடவடிக்கை என்பதால் தான். யானைகளுக்கு பயந்து விவசாய நிலங்களில், பலாப்பழங்கள் பயிரிடுவதை நிறுத்தி விட்டனர்.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Arikomban attacks yet houses peoples fear

இருப்பினும் பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

Arikomban attacks yet houses peoples fear

விரைவில் அரிகொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், வீடுகளும் சேதமடைகிறது என்று புகார் கூறுகிறார்கள் பொதுமக்கள். கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து நடப்பதால், கேரள அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

Follow Us:
Download App:
  • android
  • ios