Asianet News TamilAsianet News Tamil

Omicron : இந்தியாவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான்… 23 ஆக உயர்ந்தது பாதிப்பு எண்ணிக்கை!!

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆகவும் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆகவும் உயர்ந்துள்ளது. 

Another 2 person infected by omicron in maharashtra
Author
Maharashtra, First Published Dec 6, 2021, 8:03 PM IST

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆகவும் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆகவும் உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Another 2 person infected by omicron in maharashtra

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டிருந்தது. அதேபோல் ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Another 2 person infected by omicron in maharashtra

அதேபோல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் உறுதியாகியிருந்தது. அதை தொடர்ந்து நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த 44 வயதான பெண், நவம்பர் 24 அன்று பிம்ப்ரி-சின்ச்வாடில் தனது இரண்டு மகள்களுடன் தனது சகோதரனைப் பார்க்க வந்திருந்தார். அவர் ஒமைக்ரான்ன் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவரது 45 வயதான சகோதரர் மற்றும் சகோதரரின் இரண்டரை வயது மற்றும் ஏழு வயது மகள்களுக்கும் ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக, புனேவில் 47 வயதான ஒருவருக்கும் ஒமைக்ரான்ன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிராவின் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆகவும், இந்தியாவின் ஒமைக்ரான்ன் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து ராஜஸ்தான்- 9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-10, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios