ஆந்திரப்பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற கிராமத்தில் நந்தினி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. இந்த மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியரான  ராம்பாபு என்பவர் தேர்வில் அதிக மார்க்  வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார். அந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரில் சேர்ந்த பிறகும் ராம்பாபு சிறுமியை சீரழித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப்பதற்கான மத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். 
கரு கலைப்பு மாத்திரிகளின் பக்க விளைவுகளால் சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ராம்பாபுவை தர்ம அடி அடித்து, ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர், இதனையடுத்து ராம்பாபுவை அப்படியே ஊர்வலமாக சாலைகளில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை கற்பழித்தது தொடர்பாக ராம்பாபு மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.