Asianet News TamilAsianet News Tamil

Roja Selvamani : வாடிய ‘ரோஜா’... நகரி தொகுதியில் இனி வெற்றிக்கு வாய்ப்பில்ல... தோல்வி முகத்தில் நடிகை ரோஜா

ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, 25 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பின் தங்கி இருப்பதால் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Andhra Election Results 2024 YSRCP candidate Actress Roja Selvamani trailing in nagari constituency gan
Author
First Published Jun 4, 2024, 2:26 PM IST

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் உடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

இதையும் படியுங்கள்... ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜெகன் மோகன்.. ஆட்சியமைக்க தயாராகும் சந்திரபாபு நாயுடு..

ஆந்திராவில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றிபெற்று தான் எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு ஆந்திர அமைச்சரையிலும் இடம் கிடைத்தது. அங்கு சுற்றுலாத் துறை அமைச்சராக ரோஜா பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், இந்த முறையும் நகரி தொகுதியில் வெற்றி வாகை சூடும் முனைப்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. அங்கு கடும் பின்னடவை சந்தித்துள்ள நடிகை ரோஜா சுமார் 25 ஆயிரம் வாக்குகள் பின் தங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட தோல்வி உறுதியானதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாடிய முகத்தோடு வெளியேறினார் ரோஜா. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Live | நாடு முழுவதும் விறுவிறு வாக்கு எண்ணிக்கை! முழு களநிலவரம் இதோ! votecounting

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios