கை, கால்கள் இல்லாததை பொருட்படுத்தாமல் உழைக்கும் ஒருவரை கண்டு வியப்படைந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவரை பிசினஸ் அசோசியேட் ஆக்கி அழகுபார்த்துள்ளார்.
கை, கால்கள் இல்லாததை பொருட்படுத்தாமல் உழைக்கும் ஒருவரை கண்டு வியப்படைந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவரை பிசினஸ் அசோசியேட் ஆக்கி அழகுபார்த்துள்ளார். மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சில விந்தையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தனது நிறுவனம் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், மகாராஷ்டிராவின் தேவராஷ்டிரா என்ற கிராமத்தைச் சேர்ந்த தத்தாத்ரய லோஹர் என்பவர், பழைய உதிரி பாகங்களை கொண்டு ஜீப் ஒன்றினை உருவாக்கியிருந்தார். இதுக்குறித்து மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அதனை பகிர்ந்ததோடு வில்லேஜ் விஞ்ஞானியான தத்தாத்ரய லோஹரை பாராட்டினார்.

இதுக்குறித்த அவரது பதிவில், திறன் மிகுந்தவர்களின் படைப்பை பாராட்டுவதில் ஒருபோதும் தவறியதில்லை எனக் குறிப்பிட்டதோடு மற்றொரு ட்வீட்டில், லோஹர் தயாரித்துள்ள வாகனம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் சாலையில் இயக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே லோஹரின் புதுமையான கண்டுபிடிப்புக்கு வெகுமதியாக மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ காரை வழங்கி அவரது புதுமையான ஜீப்பை பெற்று அதனை மஹிந்திரா ரிசர்ச் வேலியில் வைத்து காட்சிக்கு வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அதேபோல மற்றொருவரை பாராட்டி டிவீட் செய்துள்ளார்.
அதில் உடல் ஊனமுற்ற ஒருவர் தனக்கு தகுந்த வகையில் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அது குறித்து பேசிய அவர், இந்த வாகனத்தை ஓட்டி தான் கடந்த 5 ஆண்டுகளாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாக கூறியதோடு தனது வாகனம் பற்றியும் விளக்கினார். இந்த விடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அந்த மனிதரைப் பார்த்து நான் வியப்படைகிறேன், அவர் தனது குறைபாடுகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை, தன்னிடம் உள்ளதற்கும் நன்றியுள்ளவராய் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டில் பிசினஸ் அசோசியேட் ஆக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.
