மேகாலயாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லேசாக கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் 43 கிலோமீட்டர் தொலைவில் தரு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோளில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. காலையில் 6.32 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிகாலை 4 மணி அளவில் திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திபெத் அல்லது ஜிசாங் பகுதிக்கு 35.6 வடக்கு அட்சரேகையிலும், 83.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 149 கீ.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள வேன் மாகானத்தின் துஸ்பா மாவட்டத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 18.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என அந்நாடு அரசு தெரிவித்துள்ளது.
