ஐஎஸ் தீவிரவாதிகள் முக்கிய இடங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. ‘இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக மார்க்கெட்டுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், திருவிழா பகுதிகள் போன்ற இடங்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.