அம்பானி வீட்டு கல்யாணம் முடிஞ்சிருச்சினு நினைச்சீங்களா? லண்டனில் 2 மாசம் கொண்டாட்டமாம்
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்டின் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்திற்காக அம்பானி குடும்பத்தினர் லண்டனில் 7 ஸ்டார் ஹோட்டலை 2 மாதங்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி தனது நீண்டகால காதலியான ராதிகா மெர்சண்டை கடந்த ஜூலை 12ம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முந்தைய பல நிகழ்வுகள் உட்பட ஆடம்பரமான திருமணத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாக்கள் தொடரும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக முகேஷ் அம்பானி செப்டம்பர் மாதம் வரை ஏழு நட்சத்திர ஸ்டோக் பார்க் ஹோட்டலை விழாவை நடத்த முன்பதிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?
லண்டனுக்கு வெளியே பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் பார்க் தோட்டத்தில் ஒரு மாளிகை, கோல்ஃப் மைதானங்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்கள் உள்ளன. ஹோட்டல் பொது மக்களுக்கு மூடப்பட்டது. ஆனால் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு திறந்திருந்தது. இப்போது, முகேஷ் அம்பானி இரண்டு மாதங்களுக்கு ஹோட்டலை முன்பதிவு செய்துள்ள நிலையில் சுமார் 850 கோல்ஃப் கிளப் உறுப்பினர்கள் கிளப்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பத்திரிகை செய்திகள் கூறுவதாவது, “அம்பானி குடும்ப உறுப்பினர்கள் இரண்டு மாதங்களுக்கு முழு இடத்தையும் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கோழி தீவனம் தான் விலை. மணமகனும், மணமகளும் குடும்பமும் இப்போது முதல் செப்டம்பர் வரை திட்டமிடப்பட்ட வெவ்வேறு பார்ட்டிகளில் கலந்துகொள்வார்கள்.
திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் இளவரசர் ஹாரி மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.