Asianet News TamilAsianet News Tamil

நுபுர் சர்மா ஆதரவாளர்கள் கொலை வழக்கு - தீவிரம் காட்டும் அமித்ஷா!

உதய்பூர் கொலைக்கும், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு வழக்கையும் தேசிய புலணாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

amaravati murder case handed over to NIA says HMO
Author
First Published Jul 2, 2022, 5:15 PM IST

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் கண்ணையாலால் வெட்டிக் கொல்லப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 21ம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொல்லப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதியில் மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கும், ஜூன் 28-ம் தேதி கொலை செய்யப்பட்ட தையல்காரர் கொலைக்கும் ஒற்றுமை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA) இந்த வழக்கை ஒப்படைத்து உள்ளது.

 


நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

ஜூன் 21 ஆம் தேதி மகாராஷ்டிரா அமராவதியில் ஶ்ரீ உமேஷ் கோல்ஹே கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை எம்ஹெச்ஏ (MHA) என்ஐஏவிடம்(NIA) ஒப்படைத்துள்ளது. கொலையின் பின்னணியில் உள்ள சதி, அமைப்புகளின் தொடர்பு மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... அவரது குடும்பத்துக்கு முதல்வர் கொடுத்த வாக்கு என்ன தெரியுமா?

நுபர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடதக்தில் பதிவிட்ட ஒரே காரணத்தால் உதய்பூர் கொலை மற்றும் இந்தக் கொலையும் நடந்திருப்பதால், ஒரே குழு இருவரையும் தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்குக்கும் பாகிஸ்தானுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை NIA விசாரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Supreme Court: விளம்பரத்திற்காக பேசினாரா நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios