டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசை இதுவரை செயல்படவிடாமல் கழுத்தை நெறித்தீர்கள். இனிமேல், செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் சிவசேனா அறிவுரை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ததெடுக்கப்பட்ட அரசை செயல்பட மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு, தீர்த்து வைத்திருக்க முடியும் ஆனால் அந்த வேலையை உச்ச நீதிமன்றம் செய்துவிட்டது என சிவசேனாக் கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்க முடியாது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆலோசனை கூறுபவராக துணை நிலை ஆளுநர் இருக்கலாம், ஆனால், இடையூறு செய்பவராக இருக்கக் கூடாது. என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.  தேசிய அரசியலை பொருத்தவரையில், இது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் , பிரதமருக்கும் இடையே நடந்த அதிகாரப்போராப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.  கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து கெஜ்ரிவால் அரசை செயல்பட வேண்டும் என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாஜக அரசை அதன் கூட்டணி கட்சியாக சிவசேனா விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.