புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இந்த ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர்கள், கூட்டத்தொடரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில், ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக மத்திய அரசுடன் வரும் 28-ம் தேதி வரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்துவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.