தல அஜீத் தற்போது விசுவாசம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தொடர்ந்து கமிட் ஆகி இருக்கும் படம் இது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தினை அஜீத் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தென்னிந்திய நடிகர்களில் மிக பிரபலமானவரான அஜீத் தனக்கு என ரசிகர்மன்றங்களை விரும்பாதவர். எளிமையை கடைபிடிப்பவர். அதே சமயம் பிறருக்கு உதவுவது போன்ற  நல்ல விஷ்யங்களை தன் ரசிகர்கள் செய்யும் போது அதனை ஊக்கப்படுத்துபவர் தல அஜீத்.

அந்த வகையில் அஜீத்தின் பெயரால் பல நற்காரியங்களை செய்துவருகின்றனர் அவரின் ரசிகர்கள். அஜீத்திற்கு கர்நாடகாவிலும் அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் கோலார் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் அஜீத்தின் பெயரில் நற்செயல் ஒன்றை செய்திருக்கின்றனர்.

பிரசவத்துக்கு இலவசம் என்று ஆட்டோக்களில் எழுதி இருப்பதை போல, இவர்கள் கர்ப்பிணிப்பெண்களுக்கு  இலவச வாகன சேவையை துவங்கி இருக்கின்றனர். 

கர்நாடக அஜீத் ரசிகர்கள் செய்திருக்கும் இந்த நற்செயலை தமிழக அஜீத் ரசிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு, மனமாற பாராட்டி இருக்கின்றனர். ” கர்ப்பிணி பெண்களுக்கு இலவச வாகன சேவை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட தல ரசிகர்களால் தொடங்கப்பட்டது...அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்” என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.