Aishwarya wearing a dress valued at 3.74 lakh
மும்பையில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், மூன்றே முக்கால் லட்சம் மதிப்புடைய உடையை அணிந்து வந்தார்.
முன்னாள் உலக அழகியும், அமிதாபச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய், தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விதவிதமான உடையில் மற்றவர்களைக் கவரும் விதத்தில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அம்மானி நடத்திய இரவு நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து வந்த உடை ஃபேஷன் உலகின் டாப் என்றே சொல்லலாம். தங்க நிறத்தில் அவர் அணிந்து வந்த ஆடையே அதற்கு காரணம்.

ஐஸ்வர்யா அணிந்து வந்த அந்த ஆடையை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். அம்பானி நடத்திய விருந்து நிகழ்ச்சி என்பதால், ஐஸ்வர்யா கொஞ்சம் காஸ்ட்லியாகவே உடை அணிந்து வந்திருக்கிறார். அவர் அணிந்து வந்த அந்த ஆடை ரூ.3.லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பு வாய்ந்ததாகும்.
டக்சிடோ என்ற இந்த நவீன கவுன், அலெக்சில் பிலே என்ற பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர், இதனை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பழங்கால உடை நாகரிகத்தை, மாடர்ன் மக்களுக்கு ஏற்றவாறு புதுமைப்படுத்துவதில் மாபிலே தனிச்சிறப்பு வாய்ந்தவர். சிறப்பு வாய்ந்த உடையை ஐஸ்வர்யா ராய் அணிகிறார் என்றால் இந்த விலை குறைவானதுதான் என்றே தோன்றுகிறது.
