Asianet News TamilAsianet News Tamil

அதிரடியாக உயர்கிறது கட்டணம்: வோடபோன் ஐடியா, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நாளை காத்திருக்கு அதிர்ச்சி .....

வோடாபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன்படி, டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து அந்நிறுவனங்களின் இணைப்பை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் மாதந்தோறும் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.45 செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

airtel charges will increase
Author
Delhi, First Published Dec 2, 2019, 11:01 PM IST

தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் காலடி வைத்தபிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஜியோ நிறுவனம் அதிரடி இலவச திட்டங்களால் குறுகிய காலத்தில் பல கோடி வாடிக்கையாளர்களை பெற்றது. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை நிறுத்தி விட்டன.

airtel charges will increase

ஜியோவின் போட்டியை சமாளித்து பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள்  தொழில் செய்து வருகின்றன. மேலும், ஜியோவுக்கு போட்டியாக அந்நிறுவனங்களும் கட்டண குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தன. இதனால் அந்த நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதித்தது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் கட்டணத்தை  உயர்த்த வேண்டும் என்ற நிலைக்கு அந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

airtel charges will increase

இந்த சூழ்நிலையில், ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் புதிய கால் மற்றும் டேட்டா திட்டங்களை நேற்று அறிவித்தன. இந்த புதிய திட்டங்களுக்கான கட்டணம் பழைய திட்டங்களை காட்டிலும் அதிகம். உதாரணமாக, வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது மாதந்திர குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.45ஆக உயர்த்தியுள்ளன. 

அதாவது டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டுமானால் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.45க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பழைய திட்டத்தின்படி குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.35ஆக இருந்தது.

airtel charges will increase

இதன்படி வோடபோன் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு ரூ.179 செலுத்தியவர்கள் இனிமேல் ரூ.299, 84 நாட்களுக்கு ரூ.569 செலுத்தியது இனிமேல் ரூ.699 என்றும், ஆண்டுக் கட்டணம் ரூ.1,699 என்றதிலிருந்து ரூ.2,399 என்றும் உயர்கிறது

அதேபோல ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு ரூ.129 செலுத்தியது இனிமேல் ரூ.148, 84 நாட்களுக்கு ரூ448 லிருந்து ரூ.598 ஆக உயர்கிறது. ஆண்டுக்கட்டணம் ரூ.1,699 லிருந்து ரூ.2,398 ஆக அதிகரிக்கிறது

Follow Us:
Download App:
  • android
  • ios