சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைக்கொண்டு  ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கியுள்ளது. 

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்து வந்தனர். ஆனால் பரிணாம வளர்ச்சி மாற மாற பெண்களின் வளர்ச்சியும் மாறிக்கொண்டே வருகின்றது. 

ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். 1910ம், ஆண்டு  ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள்  மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 

பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி  டென்மார்க் ஆஸ்திரியா ஜெர்மனி இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர். 

இந்த கொண்டாட்டத்தின் போதுதான் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென்பது முடிவு செய்யப்பட்டது. 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மகளிர்தின கொண்டாட்டம் வரும் 8 ஆம் தேதி வருகின்றது. அதை முன்னிட்டு பெண்களை போற்றும் வகையில், மகளிர் தினத்தையொட்டி சிறப்பு சேவையாக கொல்கத்தாவிலிருந்து திமாப்பூர் வரையில் விமானிகள் முதல் சிப்பந்திகள் வரை அனைத்து பணிகளிலும் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது. 

உலகிலேயே முதன்முறையாக 1985ஆம் ஆண்டு பெண்களை கொண்டு கொல்கத்தா முதல் சில்சார் வரை ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.