Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரத்தை ரவுண்ட் கட்டும் மத்திய அரசு... பழைய வழக்கை தூசிதட்டுவதால் சிக்கல்..!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Air India scam... P Chidambaram Summoned Enforcement Directorate
Author
Delhi, First Published Aug 19, 2019, 4:39 PM IST

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2007-ம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களும் ரூ.70,000 கோடிக்கு  
வாங்கப்பட்டுள்ளது. இந்த செலவினங்களால் அந்நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. Air India scam... P Chidambaram Summoned Enforcement Directorate

இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 23-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர் ஆஜராகும் பட்சத்தில் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

 Air India scam... P Chidambaram Summoned Enforcement Directorate

ஏற்கனவே, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணையை சந்தித்து வரும் நிலையில் இந்த வழக்கு அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios