Asianet News TamilAsianet News Tamil

சிறுவனின் சர்ச்சைக் குரிய கோஷம்... இருவர் மீது வழக்குப் பதிவு... கேரளா போலீஸ் அதிரடி...!

வைரல் வீடியோவின் படி சிறுவன் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி இருக்கிறான்.

After Viral Video Of Kerala Boy Raising Slogans At Rally, 2 Charged
Author
India, First Published May 24, 2022, 11:39 AM IST

கேரளா மாநிலத்தில் அரசியல் கூட்டத்தில் மைனர் சிறுவன் கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல் கூட்டத்தில் சிறுவன் இரு மதங்களுக்கு எதிரான கருத்துக்களை கோஷமாக எழுப்பிய வீடியோ காட்சிகள் வைரல் ஆனது. அரசியல் மற்றும் கலாச்சார ஊர்வலங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்படும் விவகாரம் குறித்து கேரளா உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்து இருந்தது. 

இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆலப்புழாவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தான் இந்த சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தான். மேலும் இதே கூட்டத்தில் சிறுவன் கோஷம் எழுப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவின் படி சிறுவன் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி இருக்கிறான்.

நீதிபதி வேதனை:

“இவர்கள் வளர்ந்து வருரும் தலைமுறையினர் மனதில் மதங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைக்கின்றனர்ய இந்த குழந்தை வளர்ந்து மேஜர் ஆகும் போது, இவன் மனதில் ஏற்கனவே மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருக்கும். இதற்கு எதையாவது செய்தாக வேண்டும்,” என நீதிபதி கோபிநாத் கூறி இருந்தார்.

இதை அடுத்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேரளா போலீசாரிடம் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் கொடுத்து இருக்கிறது. இதை அடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைதானவர் கோட்டயத்தை அடுத்த எராட்டுபுட்டா பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் தான் அந்த சிறுவனை கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆலப்புழா மாவட்ட தலைவர் நவாஸ் வந்தனம் மற்றும் செயலாளர் முஜீப் என இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

“சிறுவன் எழுப்பிய கோஷத்தை நாங்கள் எழுதவில்லை. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேரந்த பல ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிறுவன் எழுப்பிய கோஷத்தை பார்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், சிறுவனை தடுத்து நிறுத்தினார்,” என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios