நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடும் எம்.பிக்களின் சம்பளத்தையும் சலுகைகளையும் நிறுத்திவைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்,திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தொடர் அமளியால் மூன்றாவது வாரமாக சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் அமளியில் ஈடுபடும் எம்பிக்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளையும் நிறுத்தி வைத்து கடும் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அத்வானி கேட்டு கொண்டுள்ளார்
