Asianet News TamilAsianet News Tamil

இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – மோடியை முற்றுகையிட்ட அதிமுக எம்பிக்கள்

admk mps-pm-modi-meet
Author
First Published Nov 18, 2016, 1:13 PM IST


இலங்கை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்பிக்கள், கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதைதொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை அனைத்து வங்கியிலும், மாற்றி கொள்ளலாம். இதற்கு ரூ.2,500 வரை பெறலாம் என கூறப்பட்டது.

பின்னர், பொதுமக்கள் அதிகளவில் வங்கியில் திரண்டதால், ரூ.4,500 வரை அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி கருப்பு பணத்தை வைத்துள்ளவர்கள், பொதுமக்களை பயன்படுத்தி தங்களது பணத்தை, வங்கியில் மாற்றப்படுவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, பண மாற்றம் செய்ய வரும் மக்களின் கை விரல்களில் மை வைக்கப்பட வேண்டும். அப்படி வைத்தவர்கள், மீண்டும் பணம் எடுக்க முடியாது என அரசு அறிவித்தது. மேலும், இன்று முதல் ரூ.2000 மட்டும் வங்கிகளில் பணம் எடுக்க முடியும் எனவும் கூறியது. இதற்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் தொடங்கியது. அதில் எதிர்க்கட்சிகள், பணம் செல்லாதது, இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவத உள்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி கடந்த 3 நாட்களாக மக்களவை, மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக எம்.பி.க்கள் இன்று காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுடெல்லியில் இன்று நாடாளுமன்றத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் அதிமுக எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அதிமுக எம்பிக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிமுக எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டனர்.

வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலமாக, இந்த சம்பவம் குறித்து தான் அறிந்ததாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios