மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் அவைத்தலைவர் குரியன் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைக் குறித்தும், கதிராமங்கலம் பிரச்சனைக் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு அதிமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.

அதே போல் நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் இன்று துவங்கியது. அதிமுக எம்.பி.க்கள் தமிழக பிரச்சனைக் குறித்து பேசினர். இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் குரியன் இருக்கையை அதிமுக எம்.பி.க்கள் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் ஏற்பட்ட தொடர் அமளி காரணமாக மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது