Adityanath said users - 36 thousand crore in Uttar Pradesh farmers crop Discount
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர்ஆதித்யநாத் நேற்று நிறைவேற்றினார்.
மாநிலத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ.36 ஆயிரத்து 359 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதன்முதலாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. கோரக்பூர் தொகுதி எம்.பி.யும் மடாதிபதியுமான, யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றார். இவர் முதல்வராக வந்ததில் இருந்து பல்ேவறுஅதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
பெண்களின் பாதுகாப்புக்கு ‘ஆன்ட்டி ரோமியோ படை’, பசுவதை தடை, சட்டவிரோத இறைச்சிக்கடைகள் மூடல், அரசுஊழியர்களுக்கு ஒழுக்க நெறிகள், மக்கள் குறைதீர்ப்பு என அனைத்திலும் வித்தியாசமான நடவடிக்கை எடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும், போலீஸ் நிலையத்தை போலீசாரை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கிடுக்கிப்பிடி போட்டு இருந்தார்.
அமைச்சரவையைக் கூட்டாமல் ஏறக்குறைய 40-க்கும் மேற்பட்ட உத்தரவுகளை முதல்வர் ஆதித்யநாத் பிறப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்று 15 நாட்களுக்குபின் ஆதித்யநாத்நேற்று முதல் முறையாக அமைச்சரவையைக் கூட்டினார். லக்னோவில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
90 நிமிடங்கள் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் நேரத்தில் அளித்த முக்கிய வாக்குறுதியான விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் முதல் முறையாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் பா.ஜனதா கட்சி அளித்த முக்கிய வாக்குறுதியான பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 கோடியை 30 ஆயிரம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற ரூ.36 ஆயிரத்து 359 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் இருந்து 80 லட்சம் டன் கோதுமையை கொள்ளுமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளின் விளைவிக்கும் விளை பொருட்களுக்குகுவிண்டாலுக்கு ரூ.10 உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டது.
மாநிலத்தில் எங்கு அதிகமாக விவசாயிகள் பொருட்களை விளைவிக்கிறார்களோ அங்கு அதிகமாக கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்காக மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரம் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
