வங்கியில் உள்ள தங்களது கணக்கில் இருந்து கட்டுப்பாடுகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி, தற்போது எவ்வளவுவேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கினர். இதனல், பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதில், தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.24 ஆயிரத்துக்கு கூடுதலாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு பணத்தை எடுக்கும்போது, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.