இந்த நாட்டில் எவ்வளவோ பஞ்சாயத்துகள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் சர்வதேசமும் இந்தியாவை பார்த்து திரும்பியிருக்கிறது. ஆனால் அந்த இந்தியாவையே சர்வ இம்சையாக தன்னை நோக்கி திருப்பியிருக்கிறார் ஒரு இந்தியன். அவர் வேறு யாருமில்லை, நித்யானந்தாவேதான். 
குஜராத் உள்ளிட்ட இந்த நாட்டின் சில மாநில போலீஸார் நித்யானந்தாவை தேடிக் கொண்டுள்ளனர். ஆனால் அவரோ கைலாஸா நாடு! தென் அமெரிக்க தீவு! ஈக்வடாரின் கடலோர அதிபதி! என்று எக்கச்சக்கமாக தன்னைப் பற்றி ஸீன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்தோடு விட்டாரா நித்யானந்தா, இந்தியாவில் தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் சர்ச்சைகளையும், தனது முன்னாள் சீடர்கள் தனக்கு எதிராக தொடுக்கும் புகார் போர்களையும் கண்டு கொஞ்சமும் நடுங்குவதாக இல்லை. மாறாக ’திட்டிங், கெட்டிங், நோ பிளட் வந்திங்’ என்று தினந்தோறும் தான் செய்யும் சத் சங்கத்தில் காமெடி  செய்து களேபரம் பண்ணிக் கொண்டிருக்கிறார் மனிதர். 

இந்நிலையில், இந்தியாவிலிருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமங்களில் உள்ள பலப்பல கோடி சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும், அவை பறிபோய்விடாமல் தடுப்பதற்காகவும் நித்யானந்தாவின் மிக மிக முக்கிய பெண் சீடரும், அவரோடு வீடியோ சர்ச்சையில் சிக்கியவரும், நித்யானந்தாவின் ஆசிரம வட்டாரத்தில் ‘மா நித்யானந்த மய்’ என்று அழைக்கப்படுபவருமான ரஞ்சிதா களமிறங்கியுள்ளார்! என்று ஒரு தகவல் வந்திருக்கிறது. தமிழின் மிக முக்கிய வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் கட்டுரை ஒன்றில், நித்யானந்தாவுக்கு எதிராக வழக்கு போரை  துவக்கியிருக்கும் ஜனார்த்தன சர்மா இப்படி ஒரு தகவலை பேட்டியாக தந்திருக்கிறார். அதில் “நித்யானந்தா தன்னை அப்பா என்பார், ரஞ்சிதாவை ‘மா’ என்பார்கள். அப்படியென்றால் அவர் அப்பா, இவர் அம்மா...இருவரும் கணவன் மனைவி.  நித்யானந்தாவை தடுப்பதும், எச்சரிப்பதும், ப்ரமோட் பண்ணுவதும், கண்டிப்பதும்! என எல்லாமே ரஞ்சிதா தான். 

அந்த நித்யானந்த மய் ஆகிய ரஞ்சிதா தான் இப்போது நித்யானந்தாவுக்கு எதிராக கைது சூழல் உருவாகியிருக்கும் நிலையில், ஆசிரம சொத்துக்களைக் காப்பதற்காக இந்தியாவிற்கு திரும்பியிருக்கிறார்.”என்று சொல்லியிருக்கிறார். 
என்னவோ போங்க பாஸ்!