பெண்களும் சபரி மலைக்கு வரலாம் என உச்ச நீதி மன்ற தீர்ப்பு வழங்கிய பின், 50  வயதை எட்டாத இளம் பெண்கள் பலர், ஆண்டாண்டு காலமாக கேரளா மக்கள் பின்பற்றி வரும் வழக்கத்தை தவிர்க்கும் வகையில் கடந்த முறை, நடை திறக்கப்பட்ட போது ஒரு சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரிய பிரச்சனையே வெடித்தது.

பெண்கள் சபரிமலை கோவில் உள்ளே செல்ல சிலர் ஆதரவு தெரிவித்தாலும்... பிரபலங்கள் முதல் பலர் தங்களுடைய எதிரிப்பை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி செய்தியாளர்களிடம் பேசும் போது, 'சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தனியாக கோவில் கட்டி தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் தன்னுடைய  மனதில் உள்ளதாகவும் இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும் என கூறினார்.

மேலும் மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது சபரிமலை பகுதியில் இடம் வைத்திருக்கும் யாரவது இடம் கொடுத்தால் கூட அது சாத்தியம் தான் என கூறினார்.

சபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டி இந்த கோயில், அமைக்கும் திட்டம் உள்ளதாகவும்  புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று பேசியுள்ளார். இவருடைய பேச்சு புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.