தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா வழக்கறிஞராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக இருந்தார். இந்நிலையில் தமிழத்தில் இருந்து எழுந்த வலுவான எதிர்ப்புக் குரலால் மிரண்டு போன அபிஷேக் சிங்வி இவ்வழக்கில் தான் வாதிடப் போவதில்லை என பின்வாங்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள உரிமை மீட்புக்காக தமிழகம் எங்கும் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடத்த இந்த போராட்டம் உலகையே திருப்பிப் பார்க்க வைத்தது.

அறவழியில் நடைபெற்ற இந்த உரிமைப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை தமிழக அரசு முதலில் கொண்டுவந்தது.

பின்னர் அது நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் பல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இம்மனுக்கள் மீது வரும் 31 ஆம் தேதி விசாரனை நடைபெறவுள்ளது.

இதனை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வரும் செவ்வாய் கிழமை விசாரிக்க உள்ளது.

பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள காங்கிஸ் கட்சியினர் பீட்டாவுக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அபிஷேக் சிங்வியின் இந்த செயலுக்கு அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் துனைத் தலைவர் ராகுல் காந்தியும், அபிஷேக் சிங்வியை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புக்குரல் எழுந்ததால் மிரண்டு போன அபிஷேக் சிங்வி இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அபிஷேக் சிங்வி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோது, தன்னுடைய ஜூனியர் பெண் வக்கீலுடனும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் உள்ள ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தகைய செக்ஸ் புகழ் வாய்ந்த அபிஷேக் சிங்வி பீட்டா சார்பில் ஆஜராகிறார்.