Asianet News TamilAsianet News Tamil

ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு 3 மாத சிறை... அதிர்ச்சியில் முதல்வர்...!

சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இடையூறு செய்த வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

AAP MLA Manoj Kumar sentenced to 3 months in jail
Author
Delhi, First Published Jun 25, 2019, 5:21 PM IST

சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இடையூறு செய்த வழக்கில் ஆளங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு நீதிமன்றம் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மனோஜ் குமார், தனது ஆதரவாளர்களுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கல்யாண்புரி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற எம்சிடி பள்ளியின் பிரதான வாசலில் போராட்டம் நடைபெற்றதால், வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தேர்தலில் மனோஜ் குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். AAP MLA Manoj Kumar sentenced to 3 months in jail

ஆனால், வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தியதாக அவர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மனோஜ் குமார் குற்றவாளி என கடந்த 11-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.AAP MLA Manoj Kumar sentenced to 3 months in jail

இந்நிலையில், மனோஜ் குமாருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். அப்போது, மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios