நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது போது ராகுல் காந்தி பாஜகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பிரதமர் மோடி ஏமாற்றியுள்ளார் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசு வாக்குறுதிகளை அளித்தது என்னவாயிற்று என்று வினவியுள்ளார். மத்திய அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு ஆந்திரா பலியாகியுள்ளது.

 

அமித்ஷா மகன் விவகாரம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பிய போது பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் மற்றும் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருவதாகக் கூறி மோடி ஏமாற்றியுள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை என விமர்சனம் செய்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனால் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலமாக மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார் என ராகுல் கூறினார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும். பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை, ஆனால் சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார் என்று குற்றம்சாட்டினார். என் கண்ணைப்பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். ஏனென்றால் பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று கூறியுள்ளார். 

ராகுலின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஆனந்த குமார் எதிர்ப்பு தெரிவித்தனர். விதிகளை மீறி பேசுவதாக கூறினர். ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இறுதியில் ராகுல் பேசு முடித்த பிறகு பிரதமர் மோடியை கட்டி தழுவினார். பிறகு பிரதமர் கை குலுக்கினார்.