Asianet News TamilAsianet News Tamil

டிகிரி முடித்தோருக்கு ஏர்போர்ட்டில் வேலை! 400 காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு!

நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் செயல்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணிக்கு, பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாமென இந்திய விமான நிலைய ஆணையம் (AAI ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

AAI Recruitment 2022: Bumper vacancies at Airport Authority of India, check posts, salary, age limit and more here
Author
First Published Jun 11, 2022, 12:25 PM IST

நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் செயல்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணிக்கு, பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாமென இந்திய விமான நிலைய ஆணையம் (AAI ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதவி : இளநிலை நிர்வாகி (விமானப்போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்பு )

மொத்த காலி பணியிடங்கள் : 400

சம்பளம் : ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 வரை

வயது வரம்பு : 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மொத்த பணியிடங்களில், பொதுப்பிரிவினருக்கு 163 இடங்களும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 40 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 108 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பிப்போர் மூன்றாண்டுகள் இளநிலை அறிவியல் (B.Sc.,) படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு செமஸ்டரில் இயற்பியல் மற்றும் கணித பாடத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை பொறியியல் படிப்பு (BE.,) முடித்தவர்கள், ஏதாவது ஒரு செமஸ்டரில் இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவார். ஆங்கிலத்தில் சரளமாக, பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொது பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம். எஸ்.சி./எஸ்.டி/ பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் / பொதுப்பணித்துறை / பெண்கள் ஆகியோர் ரூ.170 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.aai.aero தளத்தில், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க துவங்கும் நாள் : ஜூன் 15, 2022

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூலை 14, 2022

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஜூலை 14. 2022

கூடுதல் விவரங்களுக்கு
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf

Follow Us:
Download App:
  • android
  • ios