Asianet News TamilAsianet News Tamil

இனி மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்’ பெற ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசு

aadhaar no-must-for-sholarship
Author
First Published Feb 19, 2017, 11:32 AM IST


பள்ளி, கல்லூரி, பல்கலையில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை (ஸ்காலர் ஷிப்)  பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அதன்படி அதிக மதிப் பெண் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த உதவித் தொகையை பெற ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அவசியம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லாமல் இருந்தால், அதற்கு விண்ணப்பம் செய்து, அதற்குரிய ஆவணத்தை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல, கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் படிப்பவர்கள் மத்திய அரசின் உதவித்தொகையை பெறுவதற்கும் ஆதார் கார்டுகட்டாயம் வழங்க வேண்டும் என்றும், இதுவரை வழங்காதவர்கள் ஜூன் 30-ந் தேதிக்குள்  கொடுக்கவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை எளிமையாகவும், இடையூறின்றி கிடைக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

ேமலும், 2017ம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் போதும், ஆதார் அட்டை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios