ரேஷன் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைத்ததால் சுமார் 2.75 கோடிக்கும் அதிகமான போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நல திட்டங்களை பெற்ற ஆதார் என்ற எண் கட்டாயம் என அறிவுறுத்தியது. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்க, அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.  

அதன்படி அனைவரும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். இதன்மூலம் 2.57 கோடி போலீ ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் அரசின் அறிவுறுத்தலின் படி  போலி அட்டைகளை பயன்படுத்தி மானிய விலையிலான உணவு தானியங்ககளை அதிக அளவு பெற்றது தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு புழக்கத்தில் போலி ரேஷன் கார்டுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் 50% போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.