காதலியை உல்லாசம் அனுபவித்துவிட்டு பணம் தேவைப்பட்டபோது அவரை விபச்சாரத்தில் தள்ளி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் கலகடகி கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. கடந்த ஆறு ஆண்டுகளில் 3 முறை காதலனால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு தற்போது தொற்று நோயினால் அவதிப்பட்டு வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரியங்காவின் அம்மா பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது அந்த அதிகாரிகள் பிரியங்காவை அழைத்து நடந்த சம்பவம் பற்றி விசாரித்தார். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஏழை குடும்பதை சேர்ந்த பிரியங்காவை 14 வயதினிலே, அவரது பெற்றோர் குடும்ப சூழ்நிலை காரணமாக 2012ம் ஆண்டு மும்பையை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு   திருமணம் செய்து  கொடுத்தனர். திருமணமான சில மாதத்திலேயே கணவர் இறந்துவிட்டார். இதனால் பிரியங்கா தனிமையில் வாழ்ந்து வந்ததால் பெற்றோர் அவரை கலகடகிக்கு அழைத்து வந்துவிட்டனர்.

பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியங்கா செங்கல் சூளைக்கு சென்று வேலை செய்துவந்தார். அப்போதுதான் காதலன் மைலாரப்பா இவருக்கு பழக்கமானார். பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா அக்கிவாடாவை சேர்ந்தவர். அந்தபகுதியில் மைலாரப்பா என்பவர் சொந்தமாக செங்கல் வியாபாரம் செய்து வந்தார். பிரியங்காவை பார்த்த மைலாரப்பா அவரை காதலிக்க தொடங்கினர். இருவரும் அடிக்கடி தனி்மையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்தனர். இந்த செய்தி அறிந்த பிரியங்காவின் பெற்றோர், மைலாரப்பாவிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார்.

ஆனால்  மைலாரப்பா பெற்றோருக்கு இதில் விருப்பமில்லை என்று கூறி மறுத்துள்ளார். இருந்தாலும் பிரியங்காவை அவரால் மறக்க முடியாத மைலாரப்பா ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். மைலாரப்பா, பிரியங்கா மற்றும் அவரது பெற்றோரை ஏமாற்றி தனது வீட்டிற்கு வேலைக்காரியாக அழைத்துச் சென்ற அவர் அவரது பெற்றோரிடம் பிரியங்காவை வேலைக்காரி என்று அறிமுகம் செய்தார்.

அவர்களும் நம்பி பிரியங்காவை வீட்டு வேலைக்கு சேர்த்தனர். இதனையடுத்து மைலாரப்பா, பிரியங்காவை பகலில் வேலைக்காரியாகவும், இரவில் வீட்டுக்காரியாகவும் பயன்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாகும் நேரத்தில் பிரியங்கா கர்ப்பமானால், கருத்தடை மாத்திரை வாங்கி கொடுத்து அதை கலைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து மைலாரப்பாவின் தொழிலுக்கு பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது என்று எசித்த மைலாரப்பா,  பிரியங்காவை விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இதற்காக பிரியங்காவிடம் மற்றொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் பிரியங்காவிடம் வாழவேண்டிய வயதில் ஏன் வீட்டு வேலை செய்கிறாய், வேறு யாரையாவது திருமணம் செய்து கொள். என பிரியங்காவை ஏமாற்றியுள்ளார்.

மைலாரப்பாவின் நாடகத்தை நம்பிய, மகராஷ்டிராவை சேர்ந்த தனக்கு தெரிந்த வியாபாரி ஒருவரிடம் அவரை விற்பனை செய்தார். குத்தகை அடிப்படையில் இந்த விற்பனை நடந்தது. இதற்காக மைலாரப்பா அந்த வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் பெற்றுக் அவருடன் அனுப்பியுள்ளார். பிரியங்கா தனக்கு திருமணம் நடக்க போகிறது என்று நம்பி அவருடன் சென்றுள்ளார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. மாறாக பிரியங்கா விபச்சாரியாக்கப்பட்டார்.

பிரியங்காவை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறிய வியாபாரி, குத்தகை தேதி முடிந்ததும், மைலாரப்பாவை வரவழைத்து, அவரை திருப்பி அனுப்பி அனுப்பியுள்ளார்.
மைலாரப்பாவும், அவரை பெலகாவிக்கு அழைத்து வந்த சில நாட்கள் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். பின்னர் மீண்டும் அவரை விற்பனை செய்ய தொடங்கினார்.

கோலாப்பூர், மும்பை என்று தனக்கு தெரிந்த வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, ஆண்டு கணக்கில் பிரியங்காவை அவர்களுக்கு அடிமையாக்கினார். 3 முறை ஏமாற்றம் அடைந்த பிரியங்கா இறுதியாக மைலாரப்பாவின் இந்த நடவடிக்கை பிடிக்காமல் கடந்த ஆண்டு அங்கோலாவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பிரியங்காவிற்கு திடிரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தனது தங்கையை பிரியங்காவை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து பார்த்ததில் பிரியங்காவிற்கு பாலியல் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதை கேட்டு பிரியங்காவின் அக்காள் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது பிரியங்கா, தான் இந்த நிலைக்கு வருவதற்கு செங்கல் வியாபாரி மைலாரப்பாதான் காரணம் என்றார்.

இதை கேட்ட அவரது அக்காள், மைலாரப்பாவை அழைத்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் மைலாரப்பா தொற்று நோய் இருப்பதால் பிரியங்காவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, நழுவிவிட்டார். மைலாரப்பா வோடு சேர்ந்து வாழ முடியாமல் பாலியல் தோற்று நோயால் தவித்து வந்த பிரியங்கா இறுதியாக தார்வார் மாவட்ட பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகளின் உதவியை நாடியதாக தெரியவந்துள்ளது.

விசாரணையில் பிரியங்கா அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட குடும்ப நலத்துறை அதிகாரிகள் பிரியங்காவை அழைத்து சென்று அங்கோலா போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ஏற்ற மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து பிரியங்காவின் காதலன் மைலாரப்பாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.