குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள  ஒரு கிராமமே  இருந்ததற்கு அடையாளம் தெரியாமல்  நிலசரிவில் சிக்கி புதைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது 

கடந்த ஒரு மாத காலமாக கேரளா மற்றும் கர்நாடக எல்லையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நலையில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிகுள்ளாகி உள்ளனர்.

பலர் வீடுகளை இழந்தும், நிலசரிவில் சிக்கி உயிர் இழந்தனர். இதுவரை 324 நபர்கள் இறந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், கர்னாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள காண்டனஹல்லி என்ற  கிராமம் நிலசரிவில் அப்படியே உள்ளே புதைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


 இந்த கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு முன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஒரு வீடு நிலசரிவில் அப்படியே சரிந்த ஒரு வீடியோ பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குடகு மாவட்டத்தில் ஒரு கிராமமே நிலசரிவில் புதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.