தனது ஐந்து குழந்தைகளையும் கங்கையாற்றில் வீசியுள்ளார். இதுபற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உணவுக் கிடைக்காத காரணத்தால் தனது 5 குழந்தைகளை கங்கையாற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், படோஹியில் உள்ள ஜஹாங்கிரபாத் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் மிரிதுல் யாதவ் – மஞ்சு. இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் ஐந்து குழந்தைகள். தினக் கூலிகளான இவர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவில்லாமல் தவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் தனது ஐந்து குழந்தைகளையும் கங்கையாற்றில் வீசியுள்ளார். இதுபற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் இப்போது திடமான மனநிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையும் அந்த பெண் குழந்தைகளை வீசியதற்கு முக்கியமானக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
