காவல் நிலையத்தில், பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் அலுவல் பணிகளை மேற்கொண்ட அவரை அவரது 
சொந்த ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், கோட்வாலி காவல் நிலையத்தில் அர்ச்சனா (30) என்ற பெண் கான்ஸ்டபிள் பணியாற்றி 
வருகிறார். இவர் தனது கைக்குழந்தையை காவல் நிலையத்தின் வரவேற்பறையின் மேஜையிலேயே உறங்க வைத்துவிட்டு, அலுவல் 
வேலையை கவனித்து வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

தன் குழந்தையுடன் ஜான்சி, காவல் நிலையத்தில் இருக்கும் புகைப்படம் குறித்து டிஜிபி பிரகாஷ் சிங் இது குறித்து கூறும்போது, பெண் 
கான்ஷ்டபிள் அர்ச்சனாவின் கணவர், குர்கானில் பணியாற்றி வருகிறார். அர்ச்சனாவின் பெற்றோர் ஆக்ராவில் வசித்து வருகின்றனர்.  

கணவரின் குடும்பத்தார் கான்பூரில் இருக்கின்றனர். இந்த நிலையில், கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் தான் 
காவல் நிலையத்துக்கு கொண்டு வருகிறார். குழந்தையைக் கவனித்துக் கொண்டே அலுவல் வேலைகளையும் அவர் பார்த்து வருகிறார் 
என்றார்.

ஜான்சியின் பணியைப் பாராட்டி, அம்மாவட்ட ஐ.ஜி. ஆயிரம் ரூபாய் பரிசளித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஜான்சியின் சொந்த ஊர் 
கான்பூர் நகரம் என்றாகி விட்டது. பெண் கான்ஸ்டபிள்களை சொந்த ஊரில் பணியமர்த்தக் கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் 
உள்ளது. எனவே, தனது பெற்றோர் வசிக்கும் ஆக்ராவுக்கு, பணி மாற்றம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். அவரது 
வேண்டுகோளின்படி, ஆக்ராவுக்கே பணிமாற்றம் செய்யப்பட்டார்.