முழு சம்பளத்தையும் கொடுக்காதவரின் மெர்சிடஸ் காருக்கு தீ வைப்பு; அதிர்ச்சி வீடியோ!!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மாவட்டத்தில் தான் செய்த வேலைக்கு முழு சம்பளத்தையும் கொடுக்காதவரின் மெர்சிடஸ் காருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெர்சிடஸ் காருக்கு சொந்தக்காரர் தனது வீட்டில் டைல்ஸ் ஓட்டுவதற்காக கூலி தொழிலாளி ஒருவரை அணுகியுள்ளார். அவரும் இவரது வீட்டில் கூறியபடி, டைல்ஸ் ஒட்டிக் கொடுத்துள்ளார். ஆனால், கூலி தொழிலாளி கேட்ட முழு சம்பளத்தையும் மெர்சிடஸ் கார் உரிமையாளர் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி, அவரது மெர்சிடஸ் காருக்கு தீவைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கில் வந்த அந்த நபர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றி தீ வைப்பது அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சர்தார்பூர் எல்லைக்குட்பட்ட காவல் சரகத்தில் நடந்துள்ளது.
குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் படகு, ரூ.200 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது