Asianet News TamilAsianet News Tamil

‘டங்கல்’ பட நாயகி ஜயிராவுக்கு விமானத்தில் பாலியல் தொந்தரவு - அழுது கொண்டே இன்ஸ்டாகிராமில் பதிவு 

A fellow traveler has been sexually harassed when he was traveling in the dangle film hero Jayara Wasam
A fellow traveler has been sexually harassed when he was traveling in the dangle film hero Jayara Wasam
Author
First Published Dec 10, 2017, 8:31 PM IST


டங்கல் திரைப்பட நாயக ஜயிரா வாசிம்  விமானத்தில் பயணத்த போது,  சக பயணி ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுள்ளார். இதை அவர் அழுதுகொண்டே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.

இது குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மஹாராஷ்டிரா மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தை ‘வெட்கக்கேடு’ எனக் தெரிவித்துள்ளது.  

டங்கல் திரைப்படத்தில் நடிகர் அமீர் கானுக்கு மகளாக நடத்து இருப்பவர் ஜயிரா வாசிம்(வயது16). ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இந்த நடிகை ஒரு மைனர் ஆவர். இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நடிகை ஜயிராவின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய பயணி ஒருவர் ஜயிராவை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவர் இது குறித்து கூறியும் உதவிக்கு விமான ஊழியர்கள் யாரும் வரவில்லை என இன்ஸ்டாகிராமில் ஜயிரா பதிவு செய்துள்ளார்.

A fellow traveler has been sexually harassed when he was traveling in the dangle film hero Jayara Wasam

டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் இதை இன்ஸ்டாகிராமில் ‘நேரலையில்’ அழுது கொண்டே ஜயிரா பதிவு செய்தார். இன்ஸ்டாகிராமில் ஜயிரா பதிவு செய்துள்ளதில் கூறியதாவது-

டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமானத்தில் நேற்று இரவு பயணித்தேன். அப்போது எனக்கு வலது புறமாக பின்னால் அமர்ந்து இருந்த பயணி ஒருவர் தனது கால்களால் என்னுடைய முதுகு புறத்தையும், எனது பின்புறத்தையும் தொட்டு பாலியல் தொந்தரவு செய்தார். 2 மணிநேர பயணம் மிகவும் வேதனைக்குரியதாகிவிட்டது. இந்த சம்பவத்தை நான் செல்போனில் பதிவு செய்ய நினைத்தபோது, விமானத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், அதை என்னால் பதிவு செய்ய முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல், அந்த பயணி எனது தோள்களையும், என் குழுத்துப்பகுதியையும் தனது கால்களால் தொட்டு என்ன தொந்தரவு செய்தார். இந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். எப்படி நீங்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கப் போகிறீர்கள்?. இது மிகவும் பயங்கரமானது. நமக்கு நாமே உதவி செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்காதவரை யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள். இது மிகவும் வேதனைக்குரியது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகை ஜயிரா தங்கி இருக்கும் ஓட்டலுக்கு  மும்பை மகளிர் போலீசார் சென்று அவரிடம் புகாரையும், வாக்குமூலத்தையும் பெற்றனர். அவரின் புகாரையடுத்து, முறைப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், நடிகை ஜயிரா வாசிம் 16 வயது நிரம்பியவர் என்பதால், போஸ்கோ சட்டத்தின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து துறைஇயக்குநரும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை கோரியுள்ளார்.

வெட்கக்கேடு

நடிகை ஜயிரா வாசிமுக்கு நடந்த பாலியல் தொந்தவரு வெட்கக்கேடு என மஹராஷ்டிரா மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ராகத்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் மும்பையில் கூறுகையில், “ நடிகை ஜயிரா பாலியல் துன்புறுத்தல் ஆளாக்கப்பட்டது குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய விமானப் போக்குவத்து ஆணைய இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் வெட்கக்கேடானது.

விஸ்தாரா விமானநிறுவனமும் என்ன விசாரணை நடத்தியுள்ளது என்பது குறித்த அறிக்கையும் கேட்டுள்ளேன். விமானத்தில் உள்ள பணியாளர்களை அழைத்தும் அவர்கள் ஏன் உதவிக்கு வரவில்லை என்பது தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் மும்பை போலீசா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். சகபயணிகள் ஜயிராவுக்கு உதவாவிட்டால், நாங்கள் உதவி செய்ய இருக்கிறோம். அவருக்கு நீதி பெற்று தருவோம்’’ எனத் தெரிவித்தார்.


விரைவான நடவடிக்கை தேவை
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நடிகை ஜயிரா பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவான நடவடிக்கை எடுக்க கோரி காஷ்மீர் முதல்வர் மெகமூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ பெண்களுக்கு எதிராக எந்தவிதமான தொந்தரவும்,குற்றமும் உடனடியாக , தீவிரமாக விசாரிக்கப் பட வேண்டும். 2 மகள்களின் தாயாக, ஜயிராவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. இது குறித்து அதிகாரிகள் விரைந்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, சிவ சேனா கட்சியும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். 


பொறுத்துக்கொள்ள மாட்டோம்
விஸ்தாரா விமான நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “ நடிகை ஜயிரா வாசிம் விமானப்பயணத்தின் போது, சக பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தப்பட்டதை அறிந்தோம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும், ஜயிராவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இதுபோன்ற செயல்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios