குடிபோதை.. நடுரோட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கிய நபர் - கண்டுகொள்ளாமல் நின்ற அந்த நபரின் தாய்!

பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் ரீதியான குற்றங்கள், நாளுக்கு நாள் வரம்பை மீறிய ஒரு வெறிச்செயலாக மாறி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

A Drunk man molested and stripped a women naked in hyderabad police filed various cases

ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாலாஜி நகரின் ஒரு சாலையில், குடிபோதையில் இருந்த ஒருவரால், 28 வயது பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, ஆடைகள் கிழிக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராச்சகொண்டா காவல் ஆணையரகத்திற்குட்பட்ட, ஜவஹர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி நகர் பேருந்து நிலையம் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெத்தமாரய்யா என்ற அடையாளம்காணப்பட்டுள்ள அந்த குற்றவாளி, அந்த பெண்ணைத் துன்புறுத்தி, உடைகளைக் கிழித்து, அவரை தாக்கியுள்ளார். 

30 வயதுடைய அந்த நபர், முதலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று, அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக நடக்க, ஆத்திரமடைந்த பெத்தமாரையா அந்த பெண்ணின் மீது பாய்ந்து வலுக்கட்டாயமாக அவரது ஆடைகளைக் கிழிக்கத் தொடங்கியுள்ளார். 

இந்த சம்பவத்தின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர், அதிக அளவில் குடித்திருந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான அந்த நபரின் தாய், அவர் அருகில் இருந்தும், அவருடைய வெறிச்செயலை தடுக்கமுற்ப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவ்வழியே பைக்கில் வந்த மற்றொரு பெண், இதில் தலையிட்டு அவரை தடுக்க முயற்சித்துள்ளார், ஆனால் அந்த நபர் அந்த பெண்ணையும் தாக்க முயன்றுள்ளார். 

இந்த கொடூர செயலை நபர் மீது சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதில் பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவு 354 (பி), காயம் விளைவிப்பதை உள்ளடக்கிய பிரிவு 323 மற்றும் குற்றவியல் மிரட்டலைக் கையாளும் பிரிவு 34 உடன் பிரிவு 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Viral Video : பெற்ற தாய் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய மகன்.. வைரல் வீடியோவில் சிக்கிய சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios