Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை சேர்ந்த படைப்பிரிவு வீரருடன்.. தமிழில் பேசி அசத்திய அருணாச்சலை சேர்ந்த மருத்துவர்! வைரலாகும் வீடியோ.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மெட்ராஸ் படைப்பிரிவு வீரருடன் சரளமாக தமிழில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

A doctor from Arunachal speaking in Tamil with  Madras Regiment soldier
Author
First Published Oct 5, 2022, 7:14 PM IST

இந்தியாவில் பல்வேறு மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அதில் மிகவும் தொன்மையான மொழியாக தமிழ் மொழி அறியப்பட்டாலும், வடகிழக்கு நாடுகளுக்கு செல்லும் போது தமிழ் மொழியில் பேசுபவர்களை பார்ப்பது மிகவும் அரிது என்றே கூறலாம். ஆனால், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர், சரளமாக தமிழ் மொழியில்... சென்னையை சேர்ந்த ரெஜிமென்ட் வீரருடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களுக்கு பொதுவாக யார் சென்றாலும்... நமக்கு நன்றாக தெரிந்த தாய் மொழியை யாராவது பேசுவார்களா என்று, நெஞ்சம் ஏங்குவது உண்டு. அப்படி ஒரு நபரை பார்த்தால், சில நிமிடங்களிலேயே நமக்கு அவரை பிடித்து போய்  நம்முடைய குடும்ப கதையை கூட பேச துவங்கி விடுவோம் அப்படி தான், இந்த சென்னையை சேர்ந்த படை வீரர், அருணாச்சலில் தமிழ் மொழி பேசும் மருத்துவரை கண்டவுடன் தன்னுடைய குடும்ப கதையெல்லாம் பேசி மகிழ்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஹீரோயின்களை மிஞ்சும் அழகு! மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து திருமணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஹரீஷ் கல்யாண்!
 

A doctor from Arunachal speaking in Tamil with  Madras Regiment soldier

இந்த உரையாடலின் வீடியோவை அருணாச்சல பிரதேச முதல்வர் (Pema Khandu) பீமா காண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், டாக்டர் லாம் டோர்ஜி என்பவர் மெட்ராஸ் ரெஜிமென்ட் படை வீரருடன் சரளமான தமிழில் பேசுவது கேட்கிறது. டாக்டர் லாம், தமிழ் மொழியில் பேச காரணம் அவர் தமிழ்நாட்டில் தான் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார். இவர்கள் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங்கில் சந்தித்து பேசியுள்ளனர்.மேலும் இந்த வீடியோ உண்மையான தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும், இதனால்  நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று அருணாச்சல முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில், அதிகம் பார்க்கப்பட்டு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios