Asianet News TamilAsianet News Tamil

பிளாஸ்டிக் பெட்டியை விழுங்கிய கண்ணாடி வீரியன்! அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள்!

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள கால்நடை மருத்துவர் யஷஸ்வி நாரவி தலைமையிலான மருத்துவர் குழுவினர், ஒரு கண்ணாடி வீரியன் பாம்பை அறுவை சிகிச்சை செய்து, அது விழுங்கிய பிளாஸ்டிக் பெட்டியை அகற்றி காப்பாற்றியுள்ளனர்.
 

A cobra swallowed a plastic box! Doctors who removed surgery!
Author
First Published Jun 23, 2023, 10:37 AM IST

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள கால்நடை மருத்துவர் யஷஸ்வி நாரவி தலைமையிலான மருத்துவர் குழுவினர், ஒரு கண்ணாடி வீரியன் பாம்பை அறுவை சிகிச்சை செய்து, அது விழுங்கிய பிளாஸ்டிக் பெட்டியை அகற்றி காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவர் யஷஸ்வி கூறியதாவது, பண்ட்வாலைச் சேர்ந்த பாம்பு மீட்பவர் ஸ்னேன் கிரண், ஒரு துளையில் இருந்த பாம்பைக் கண்டு, அது இருநாட்களாக அசையாமல் ஒரே இடத்தில் இருந்ததால், அதற்கு மருத்துவ உதவி தேவை இருப்பதாக நினைத்து அந்த பாம்பை, தங்களது மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்.

அந்த பாம்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாம்பின் காடால் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பெரிய திடப்பொருள் இருப்பதைக் கண்டோம். அது ஒரு பிளாஸ்டிக் என்பதை ரேடியோகிராஃப் உறுதிப்படுத்தியது. அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்ணாடி வீரியன் பாம்புக்கு மயக்கம் அளித்து, கடந்த ஜூன் 4 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடந்து வெற்றிகரமாக அந்த பிளாஸ்டிக் பெட்டி அகற்றபட்டு தையல் இடப்பட்டது என கூறினார்.

பாம்பு விழுங்கிய பிளாஸ்டிக் பெட்டியைக் கண்டு ஆச்சரியப்பட்டோம், அதில், ஒரு சில முட்டை ஓடுகளும் கிடைத்தன. முட்டையுடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பாம்பு விழுங்கியிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்தார். தற்போது, அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பாம்பு 15 நாட்களுக்கு உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் டாக்டர் யஷஸ்வி கூறினார்.

"அதிர்ஷ்டவசமாக, சரியான நேரத்தில் பாம்பு மீட்கப்பட்டு, உரிய சிகிச்சைக்குப் பிறகு அது மீட்கப்பட்ட அதே இடத்திற்கு மீண்டும் விடுவிக்கப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார்.

காலை எழுந்தவுடன் இவற்றை பார்க்காதீங்க... வீட்டில் அசுபங்கள் பெருகும்..!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios