A Christian church there is a plan to give more children a great couple.
மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகையை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அதிகமான குழந்தைகள் பெரும் தம்பதிக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தொடங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலம் நாட்டிலேயே 2-வது மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதாகும். இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 52 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இதனால், மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், அந்த மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலாயம் ஒன்று புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.
அங்குள்ள ‘தி லங்கிலி பஜார் வெங் பேப்டிஸ்ட் சர்ச்’ இந்த நூதன திட்டத்தை தொடங்கி இருக்கிறது. தம்பதிக்கு4-வது குழந்தை பிறந்தால், 4 ஆயிரம் ரூபாய், 5-வது குழந்தை பிறந்தால், ரூ.5 ஆயிரம் என அதிகமான குழந்தை பெற்றால் அதிகமான பரிசு என அறிவித்துள்ளது. குழந்தை பெறுவதற்கான உச்சபட்ச அளவை அந்த தேவாலயம் நிர்ணயிக்காமல் அதிகமான குழந்தைகளுக்கு அதிகமான பரிசுத்தொகை எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மிசாரோம் பிரஸ்பைட்டீரியன் சர்ச் ஆப் இந்தியாவின் செயலாளர் லால்ராம்லீனா பச்சானு கூறுகையில், “ நாங்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறோம். ஆனால், நாங்கள் பரிசு ஏதும் அறிவிக்கவில்லை.
மாநிலத்தில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், அதை அதிகப்படுத்த மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம். ஆனால், ஒரு சில தேவாலயங்கள் அதிகமான குழந்தை பிறப்புக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ளன என்பது உண்மைதான். மக்கள் தொகை குறைந்து வருவதால், ஒரு குடும்பத்துக்கு இத்தனைநபர்கள்தான் இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து அதிகமான குழந்தை பெற பிரசாரம் செய்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.
தேசிய அளவிலான 4-வது குடும்ப நல ஆய்வுப்படி, 2015 ஜனவரி முதல் 2016 டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில், மிசோரம் மாநிலத்தில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு என்பது 34ல் இருந்து 40 ஆக உயர்ந்து 18சதவீதம் அதிகரித்துள்ளது.
பச்சிளங்குழந்தைகள் இறப்பைத் தடுக்கவும், அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அங்குள்ள மக்களுக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
