தமிழகத்தில், நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 42 கிலோ மீட்டர் நீளமுள்ள வில்லுக்குறி - கன்னியாகுமரி சாலை திட்டம் ( ரூ.550 கோடி மதிப்பு, 33 கிலோ மீட்டருக்கு சென்னை - தடா இடையிலான ஆறு வழி சாலை திட்டம் (ரூ.300 கோடி மதிப்பீடு ), 30 கிலோ மீட்டருக்கு செட்டிகுளம்-நத்தம் இடையிலான நான்கு வழி சாலை திட்டம் (ரூ.45 கோடி மதிப்பீட்டில்) உள்ளிட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக இந்த இந்த திட்டங்களுக்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே பணிகளை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டில் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலுரை அளித்தார்.

அதில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காகவும், திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கொரனோ பேரிர் காலத்தில், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் நெடுஞ்சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக கூறினார். மேலும் சென்னை-தடா இடையிலான 6 வழி சாலை, செட்டிகுளம்-நத்தம் இடையிலான நான்கு வழி சாலை, விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு நெடுஞ்சாலை, வில்லுக்குறி- கன்னியாகுமரி இடையிலான சாலை , சோழபுரம்-தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை மற்றும் காரைக்குடி-ராமநாதபுரம் இடையிலான 80 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை திட்டம் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் இந்தாண்டு முடிவடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
