83 age old did 2nd mariage with 30 yrs old lady
83 வயதான தாத்தா 30 வயது இளம்பெண்ணுடன் மணம்...! புது காரணம் சொல்லும் மாப்பிள்ளை..!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்ராம்,தன்னுடைய 83 ஆவது வயதில்,30 வயது ரமேசி தேவி இளம்பெண்ணுடன் மணம் முடித்துள்ளார்.
இதற்கான இவர்களுடைய திருமணத்திற்கு மனைவி தரப்பிலிருந்தோ அல்லது அவரது உறவினர் தரப்பிலிருந்தோ, ஊர் பொதுமக்களோ யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை....
அதற்கு மாறாக பல்வேறு இடங்களில் இருந்து வந்து, புதுமண தம்பதிகளை வாழ்த்தி உள்ளனர்.
சுக்ராம்
1958-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது.ஒரே ஒரு மகன் இருந்துள்ளார்.அந்த மகன் 30 ஆவது வயதில்,கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனாராம்.
தற்போது இவர்களுக்கு எந்த வாரிசும் இல்லை என்பது தான் பெரிய குறையாம்.இவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அனுபவிக்க வாரிசு இல்லாததால்,ஒரு வாரிசை பெற்றெடுக்க முடிவு செய்து, இரண்டாவது திருமணம் செய்துள்ளார் .
அதுவும் மனைவி ஒப்புதலுடன்...
இது பற்றி இரண்டாவது மனைவி ரமேசி தேவி உறவினர் பேசும் போது....
மணப்பெண்ணின் உறவினர் கூறும்போது,ரமேசி தேவி அவரது வீட்டுக்கு ஒரே பெண்தான்.அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன்தான் இந்த திருமணம் நடந்தது” என்றார்.
இந்த திருமணம் ஆடல் பாடலுடம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்த வில்லை....
